haridwar ..... 19.09.1972
ஆதவனின் முன்னின்ற அனைத்துப் பேர்களுக்கும்
அனுபவம் வெவ்வேறாய் எப்போதும் இருப்பதில்லை
சிலருக்கு சூடாயும் சிலருக்கு குளிராயும்
ஒருபோதும் எஞ்ஞான்றும் இருந்ததில்லை
கோயில் உறைகல் முன்னின்ற பேர்களிலோ
மேனி சிலிர்ப்பாரும் ஞானி ஆவோரும்
கண்ணீர் விட்டுக் கலங்கித் திரிவோரும்
வரவு சிலவு அற்று வாண் பார்த்து நிற்போரும்
மந்திரங்கள் முனமுனத்து மயங்கித் திரிவோரும்
நேரம் வீணென்று வெளி வாசல் வந்து நின்று
தூண்களை எண்ணுவோரும் தூரிகை ரசிப்போரும்
குளக்கரை வந்தமர்ந்து மழலைச் சொல் கேட்போரும்
இன்னும் சில பேர்கள் நம்பிக்கை அற்றவராய்
கோயில் உறை கல்லினையே போட்டுடைத்து மகிழ்வோரும்
என்று பலபடியாய் இருக்கின்ற காரணத்தால்
கல்லிலே இல்லை கடவுள் என்று அறிந்தேன்.
உள்ளத்தில் உறைகின்ற உண்மையை அறிந்துகொண்டு
உள்ளொளி பெருக்கி உவகை மிகக் கொண்டு
சித்தத்தை என்றும் சிவன் பால் வைத்து
ஆனந்தப் பெருவெளியாம் துரிய நிலை எய்தி
ஆகாய வெளி போல ஆன மனம் செய்து
செயல்பாடு இல்லாத சீர் நிலையை அடைந்து
ஊர் ஊராய் திரிகின்ற உன்மத்தம் செய்யாமல்
ஓரிடத்தில் அமர்ந்து உள் நோக்கி இருந்து
இன்பம் பெருகெடுக்கும் ஈசனும் வந்திடுவான்
ஜோதிர் மயமாகி அருளிடுவான் பராபரமே.
the experiences of the people in front of the
sun is not different.
for some it is not heat
and for some it is not cold.
but the people who are standing
in front of deities are not same.
some are in trance some are become saints
some are weeping and some are blabbering
some are not having the world consciousness
some are chanting mantras and become insane
some think waste of time and come out
and counting the pillars enjoying the paints
some sit in the water tank hearing their children's words
some losing their faith throw the statues
and break them in to pieces.
hence the God is not in the stone I realize
know the truth that He is inside you
increase the light in you increase the joy in you
put the mind on Him permanently
reach the fourth stage of consciousness
make the mind as the sky
stop the actions binding you
stop the mendicant type of travel
sit in a place search inside you
bliss will come inside and also Him
eternal brightness will be there.