the fire inside

Ashokha

Forty years have passed. but still the fire kindled by Him is burning inside

Wednesday, February 6, 2013

ஆதவனின் முன்னின்ற அனைத்துப் பேர்களுக்கும்...experiences of the people in front of the sun


haridwar  .....  19.09.1972





ஆதவனின் முன்னின்ற அனைத்துப் பேர்களுக்கும்
அனுபவம் வெவ்வேறாய் எப்போதும் இருப்பதில்லை
சிலருக்கு சூடாயும் சிலருக்கு குளிராயும்
ஒருபோதும் எஞ்ஞான்றும் இருந்ததில்லை
கோயில் உறைகல் முன்னின்ற பேர்களிலோ
மேனி சிலிர்ப்பாரும் ஞானி ஆவோரும்
கண்ணீர் விட்டுக் கலங்கித் திரிவோரும்
வரவு சிலவு அற்று வாண் பார்த்து நிற்போரும்
மந்திரங்கள் முனமுனத்து மயங்கித் திரிவோரும்
நேரம் வீணென்று வெளி வாசல் வந்து நின்று
தூண்களை எண்ணுவோரும் தூரிகை ரசிப்போரும்
குளக்கரை வந்தமர்ந்து மழலைச் சொல் கேட்போரும்
இன்னும் சில பேர்கள் நம்பிக்கை அற்றவராய்
கோயில் உறை கல்லினையே போட்டுடைத்து மகிழ்வோரும்
என்று பலபடியாய் இருக்கின்ற காரணத்தால்
கல்லிலே இல்லை கடவுள் என்று அறிந்தேன்.
உள்ளத்தில் உறைகின்ற உண்மையை அறிந்துகொண்டு
உள்ளொளி பெருக்கி உவகை மிகக் கொண்டு
சித்தத்தை என்றும் சிவன் பால் வைத்து
ஆனந்தப் பெருவெளியாம் துரிய நிலை எய்தி
ஆகாய வெளி போல ஆன மனம் செய்து
செயல்பாடு இல்லாத சீர் நிலையை அடைந்து
ஊர் ஊராய் திரிகின்ற உன்மத்தம் செய்யாமல்
ஓரிடத்தில் அமர்ந்து உள் நோக்கி இருந்து
இன்பம் பெருகெடுக்கும் ஈசனும் வந்திடுவான்
ஜோதிர் மயமாகி அருளிடுவான் பராபரமே.

the experiences of the people in front of the 
sun is not different.
for some it is not heat 
and for some it is not cold.
but the people who are standing 
in front of deities are not same.
some are in trance some are become saints
some are weeping and some are blabbering
some are not having the world consciousness
some are chanting mantras and become insane
some think waste of time and come out
and counting the pillars enjoying the paints
some sit in the water tank hearing their children's words
some losing their faith throw the statues
and break them in to pieces.
hence the God is not in the stone I realize
know the truth that He is inside you
increase the light in you increase the joy in you
put the mind on Him permanently
reach the fourth stage of consciousness
make the mind as the sky
stop the actions binding you
stop the mendicant type of travel
sit in a place search inside you
bliss will come inside and  also Him
eternal brightness will be there.

அப்பனுக்குப் பாடம் சொல்ல...to teach his father


thiruvalanchuzhi.....23.08.1973






அப்பனுக்குப் பாடம் சொல்ல அங்கிருந்தான் கந்தன்
இந்திரனுக்கு அருள் செய்ய இங்கிருந்தான் அண்ணன்
இப்போது எமக்கருள இங்கழைத்து வந்தான்
முப்போதும் நீங்கேன் வலஞ்சுழியே.


lord skanthan is there to teach his father
his brother is here to grace Indhra
now He brings me here to grace me
oh Valanjuli I will not leave you three parts of the day.

நாளை போவோம் என நாட்கள் கடந்ததன்று....days are gone postponing the travel


Kalahasti,  24.07.1975






நாளை போவோம் என நாட்கள் கடந்ததன்று
கோளும் குறுக்கிருந்து குறு நகை செய்த தன்று.
பாழும் வினையெல்லாம் பாழ் பட்டுப் போனதின்று
காளத்தினாதனை கண்டேன்.

days are gone postponing the travel
planets are smiling standing in the way
all the sins are destroyed today
I have seen the Kaalaththinathan.

பொன்வேண்டி பொருள் வேண்டி...many cries for money and gold

thirukkadaiyur....21.12.1976



பொன்வேண்டி பொருள் வேண்டி புலம்புவோர் பலருண்டு
உன் அருள் வேண்டி நின்றேன் நாளும்
என் மனம் புகுந்து இனியன செய்தாய்
தேனினும் இனிய திருக்கடவூரானே.


many cries for money and gold
i am here to ask your grace
you have done the good by entering my mind
oh, sweeter than the honey, thirukkadavooran.

oh mind, I know that you are also a sense.மனமே நீயும் ஒரு புலன்தான்

nagore...1.07.1972



மனமே நீயும் ஒரு புலன்தான் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.   ஐம்புலன்களும் ஓய்வெடுப்பதுபோல் நீ ஓய்வதில்லை.   அதுதான் வித்தியாசம்.   நான் விழித்துக் கொண்டதும் நீயும் விழித்துக் கொள்கிறாய்.   ஓடிக்கொண்டே இருக்கிறாய்,  சில நேரங்களில் எனக்கும் முன்னாலே.   உனக்கு நீயே நான் என்ற கர்வம்.   ஆனால் அது உண்மையில்லை என்று எனக்குத் தெரியும்.    நான் விழித்துக் கொண்டிருக்கும்போதும் உன்னை உறங்க வைக்கும் வழி எனக்குத் தெரிந்து விட்டது.   எனவே நீ இனி ஆட்டம் போடாதே.   ஓரமாய் இரு.   என்னுடன் ஆனந்தமாய் இரு.

oh mind, I know that you are also a sense.   you are not taking rest as other senses.   that is the difference.   when I am awake you are also awake.   you are always running,  sometimes faster than me.    you are having the ego that you are me.    but that is not true that I know.   now I know the technique to make you sleep even when I am awake.   so don't dance too much.   be in a corner.   be in bliss with me.

Sunday, January 27, 2013

throwing away all the garbages outside the mind


kattu bava pallivasal,thirumayam,pudukkottai.   04.06.1998





உள்ளே உள்ள குப்பையெல்லாம்
வெளியே கொண்டு கொட்டிவிட்டு
வெட்ட வெளிச் சித்தனானேன்டி குதம்பாய்
விஞ்ஞானம் தெரிந்து கொண்டேன்டி.

கால நேரம் தெரியாமல் கண் மூடி உட்கார்ந்து
கடவுளைத் தெரிந்து கொண்டேன்டி குதம்பாய்
கடவுளும் ஒரு ஆண்டிதானடி.

அறிவினால் ஆவதென்ன ஒன்றுமில்லை என்று கண்டு
அன்பு மயம் ஆனேனடி குதம்பாய்
அன்புதான் ஆண்டானடி.

throwing away all the garbages outside the mind
I have become the open plain saint oh,child
technique is learned.

by closing the eyes hours together
I have found out the God oh,child
God is also a menticant.

by founding that knowledge is nothing
I have immersed in love oh,child
Love is God.

oh, mind please stop.


tiruvannamalai ramanasram,  23.09.1972





மனமே நீ நில்.   நீதான் இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாய் இருக்கிறாய்.   சந்தோஷங்களுக்கும் நீதான் காரணமாய் இருக்கிறாய் என்றாலும் ஜீவன் இயல்பிலேயே ஆனந்தமானவன் என்பதால் நீயில்லாமலும் அவன் ஆனந்தாமாய் இருப்பான்.  எனவே நீ நில்.

oh, mind please stop.   you are the basic for all the problems.   even though you are the reason for happiness without you also the being can be happy as basically happiness is the nature of him.   so please stop.

oh, God come, please come as light.

amarnath cave,06.03.1972



இறைவா நீ வா.   ஒளியாகிய வெள்ளத்தில் இக்குழந்தையை மூழ்கச் செய்து அஞ்ஞான இருட்டை அகற்றுவதற்கு வா.    அன்றாடம் உணவுக்கு அலையும் ஆண்டியாகவோ பாரெல்லாம் ஆளும் அரசனாகவோ ஞானத்தில் முக்குளித்த பழமாகவோ இல்லை குடும்பத்தில் உழலும் சாதாரணனாகவோ நீ வா.   நீ வர வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர நீ எப்படி வந்தாய் என்பது முக்கியமல்ல.   ஆனால் நீ வந்திருக்கிறாய் என்பதை உணரும் சக்தியையும் நீதான் எனக்கு தர வேண்டும்.   உன் கருணை இல்லாவிடில் நீ வந்தால் கூட உணர முடியாத இருட்டில்தான் நான் இருப்பேன்.   எனவே நீ வா.   ஒளியுடன் வா.   அருளுடன் வா.   சொல்லிவிட்டு வா.

oh, god come.   to remove the darkness of the ignorance and to put this child in light come.    come as a beggar who is searching the food daily  come as a king who is ruling this world come as a saint who is immersed in wisdom or come as an ordinary man who is suffering in family.   you must come that is important and how you are coming is not important.   but you must give the knowledge to realize that you have come.   if there is no affection of you I will only be in the darkness of ignorance even after you have come.   therefore come.   come with light.   come with grace.   and tell before you come.  that is important.

Saturday, January 26, 2013

இந்த மனம்தான் எல்லாமாய் இருக்கிறது....this mind is all.


gangotri caves,river ganges, 24 3.1972.




இந்த மனம்தான் எல்லாமாய் இருக்கிறது.   பெற்றோர் எனவும் மற்றோர் எனவும் உற்றோர் எனவும் உறவினர் எனவும் நண்பன் எனவும் பகைவன் எனவும் இதுவே கற்பிதம் செய்து கொள்கிறது.   மனம் இல்லையாயின் ஒன்றும் இல்லை.  ஆயின் நீ உண்டு.   அந்த நீ மனம் இல்லை என்பதறிவாய்.   நீ உடலும் அல்ல.  உயிரும் அல்ல.   நீ நீயே.   வேறொன்றுமில்லை.   அந்த ஒன்றும் இல்லாத நீ யார்.   ஆயினும் நீயே எல்லாமும் ஆவாய்.   நீ எதனாலும் பாதிக்கப் படாதவன் என்பதை உணர்.   எப்போது மனம் நீ இல்லையோ அப்போது மனதின் கற்பிதங்களும்  அதன் விளைவுகளும் உனக்கில்லை.   உனக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் மற்றவர்களுக்காக வைக்கப்பட்ட ஓர் அடையாளம்.   உன் உத்தியோகம் உன் வயிற்றுக்காக நீ செய்வது.   நீ சுப்ரமணியன் என்பதோ நீ கிளார்க் என்பதோ தகப்பன் என்பதோ மகன் என்பதோ மற்றவர்களுக்குத் தெரிவதற்காக மற்றவர்கள் வைத்த அடையாளங்கள்.   உனக்கு நீயே யார் என்று பார்.   அப்படி ஒரு அடையாளம் உண்மையிலேயே உண்டு.   கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான்.   இருந்தாலும் முயற்சியை விட்டு விடாதே.   வெற்றி உண்டு.


this mind is all.   it imagines the parents others relations relatives friends and enemies.   if there is no mind nothing exists.   but you are there.   that mind is not you.   you are not the body.  not the life.   you are only you.   nothing else.   who is that you which is nothing.   but you are everything.   you are not affected by anything.   as you are not the mind then the imaginations and its effects of the mind are not you.   the name put to you is an identification to others.   your job is only for your stomach.   you are "raj" and you are a "clerk" you are a father or mother you are a son all these are only identifications put by others to know you.   try to know whom you are to yourself.   one such identification is really there.   it is somewhat hard.  but try.  success is yours.

Wednesday, January 23, 2013


tirumala,tirupathy,mahalakshmi sannathy,  15.6.1972




தாய் நடுவே வீற்றிருக்கிறாள்.  சுற்றிலும் பவுன் நாணயங்களாய் குவிந்து கிடக்கிறது.   சில குழந்தைகள் அந்த பவுன் நாணயங்களை எடுத்து விளையாடுவதில் திருப்தி அடைந்து விடுகின்றன.   தாயின் அருகே போகும் எண்ணம் அவைகளுக்கு இல்லை.   இன்னும் சில குழந்தைகள் தாயின் மடி மீது ஆனந்தமாய் விழுந்து புரண்டு கொண்டிருக்கின்றன.   நாணயங்களை பற்றிய கவலை அவைகளுக்கில்லை.   ஏதோ ஒன்றிரண்டு குழந்தைகளே மடியிலும் திருப்தியுறாது தீவிரமாய் அழுது அந்தத் தாயை பாலூட்டச் செய்து விடுகின்றன.   மாயையாய் நின்று உலக சுகங்களை காட்டி ஜீவன்களைத் தடுப்பவளும் அவளே.   வழியைக் காட்டி அன்புடன் அழைத்து விளையாட்டுக் காண்பிப்பவளும் அவளே.   தீவிரக் குழந்தைகளுக்கு ஞானமாகிய  பாலைத் தருபவளும் அவளே.   தாயே எது நல்லது என நீ அறிவாய்.   அதனை இக் குழந்தைக்கு தருவாய்.   நடுவில் மயங்கி இருந்து விடாதவாறு அழைப்பாய் எப்போதும்.

Mother Goddess is sitting in the center     Gold coins are scattered around Her.   Some children are satisfied with taking some coins and play with them.   They are not having the idea of going near Her.   Some other children are climbing and playing in the laps of Her and satisfied.   They are not worrying about the gold coins.    Only some one or two children by weeping vigorously make Her to feed the milk to them.   By showing the ignorance and by giving the worldly pleasures only She is restricting the beings to get wisdom.   By paving the way for devotion only She is allowing some other children to play in this world.   And for some vigorous children only She is giving the milk of wisdom.   Oh, mother you know what is good for us.   Give it to this child.   Always help me not to be immersed in ignorance.




river ganges, varanasi, 24.08.1971




நொப்பும் நுரையுமாய் பெரும் பிரவாகமாய் போகும் ஆறு கரையில் இருந்து பார்க்க அழகாய் இருக்கிறது.   தண்ணீரில் இறங்கினால் தெரியும் என்ன ஆகும் என்று.   வாழ்க்கையும் அப்படித்தான்.   வெளியிலே இருந்து பார்த்தால் ஆரவாரமாய் பிரமாதமாய்த்தான் இருக்கிறது.   விலகி இருக்கத் தெரியாமல் இறங்கிவிட்டால் அப்புறம் அதன் இழுப்புக்கு போக வேண்டியதுதான்.  எங்கே கொண்டுபோய்ச் சொருகுமோ யார் கண்டது.

with waves and bubbles the river is beautiful when you are seeing it from the bank.   if you get down in the water you can't know what will happen.   life is also like that.    from outside it is beautiful with uproar  and fantastic.   without knowing how to be away from this if you get down then you will have to go as per it's desire.   where it will tuck you in who knows.

abirami sannathi, thirukkadaiyur.   29.07.1981.



மனிதா நீ தாயிடம் என்ன கேட்கிறாய்.  கையிலே தங்கக் காப்பும் காலிலே வெள்ளிக் கொலுசும் அணிந்திருந்தால்தான் பால் தருவேன் எனும் தாயும் உண்டோ, சொல்.   அவளுக்கு எல்லாம் ஒன்றுதானே.   பட்டுச் சொக்காய் போட்டிருந்தாலும் பாழும் மண்ணில் புரண்டு வந்தாலும் அவள் அன்பில் மாருதல் உண்டோ.   உனக்கு என்ன தர வேண்டுமெனத் தெரியாதவளா அவள்.   உனக்குப் பசிக்கும் போது உணவையும் குளிரும்போது உடையையும் மழையில் நனையும் போது ஒரு கூரையையும் அவளே தரட்டும்.  நீ ஏன் கேட்கிறாய் எனக்குப் பனை ஓலைக்கூரை வேண்டாம் என்றும் கான்கீரீட் கூரைதான் வேண்டும் என்றும்.   உனக்கு தரவேண்டியது அலுமினியத் தட்டா இல்லை தங்கத் தட்டா என்பதை அவளே தீர்மானிக்கட்டும்.  பருத்தியா பட்டா என்பதையும் அவள் கையில் விட்டு விடு.   பனை ஓலையா கான்க்ரீட்டா என்பதையும் அவளே பார்த்துக் கொள்ளட்டும்.   நீ ஏன் புலம்பித் திரிகிறாய்.   தங்கத் தட்டுத்தான் வேண்டும் என்பவன் தன் கைத்தட்டையும் போட்டு உடைப்பான் என்பதை மறந்துவிடாதே.


oh, man,  what are you asking to Mother Goddess.   Is there any mother who will tell that she will give milk to the child who is wearing a gold bracelet in hands and a silver chain in legs.   all are same only to Her.   there is no difference in Her love whether you are wearing a silk shirt or with mud all over your body.   can She doesn't know what can be given to you.   Let She gives the food when you are in hungry gives the dress when you feel shivering in cold gives a roof when you are wetting in a rain.   Why you are asking a concrete house instead of a palm leaves house.   Let She decides whether you are eligible for a golden plate or an aluminium plate.   Let She decides palm leaves house or concrete house.   Why you are blabbering.   One who asks a golden plate will throw and break the aluminium plate also.   Don't forget.


(advice given to a friend who is asking a house) 



Peikulam suntharakshi temple sannathi
17.07.1971.

இவள்தான் எவ்வளவு மாறாத புன்னகையுடன் சம்ஹாரம் செய்கிறாள்.   எவள் ஒருத்தியால் படைக்க முடியுமோ அவளால் அழிக்கவும் முடியும் போலும்.   விருப்பு வெறுப்பின்றி இவள்தான் படைத்தலையும் அழித்தலையும் சம நோக்குடன் செய்கிறாள்.   குயவன் ஒருவன் களிமண்ணைப் பிசைந்து பானையாய்ச் செய்கிறான்.   சரியாக வரவில்லையெனில் மீண்டும் பிசைந்து களிமண் உருண்டை ஆக்கி விடுகிறான்.  பானையை அழித்துவிட்டோமே என அவன் வருந்துவதில்லை.  பானை ஒருவேளை வருந்துமோ.   சரியாக வராத ஜீவர்களையும் அவளும் அவ்வாறுதான் அழித்துவிடுகிறாள்.   ஜீவன்தான் மாயையில் அழுகிறான்.

She is doing the destruction with a smile.   who can create this life can destroy them also.   she is doing this without any attachment or detachment.  a potter is creating a pot with clay. if that is not coming well he will destroy it and make it as a clay ball.   he is not worrying for that destruction.  the pot may feel sorry.   she is also destructing the life which is not coming well.  the life may be weeping for that.